கடந்துபோன நிமிடங்கள்
தொலைந்துபோன என் தூக்கங்களை தொகுத்து வைத்திருக்கிறேன் கவிதைகளாய்..! இந்த கடந்து போன நிமிடங்களில்...!
16 December 2010
எப்படிப்பிடிக்க ..?
கைமீறிப்போகிற எதையும்
உடனே பிடிக்க முடிவதில்லை
குடையோ ...
பட்டாம்பூச்சியோ ....
உன் காதலோ ....
எதையும்..!
மேகஉருவம்
மேகங்கள் உருவங்களாய்
வருவதால் ....
பொம்மைகள் உறங்கிவிட்டன
குழந்தைகள் இல்லாமல்...!
ஏன்
வானமே இருக்கிறது பறந்து செல்ல
இன்னும் ஏன்
முட்டைக்கூட்டுக்குள் முடக்கம் ?
காதலின் சின்னம்
உலக காதலின்
ஒட்டுமொத்த
பனித்துளி ...!
இது என்றுமே
உடைந்து போகாத நீர்க்குமிழி ...!
முயற்சி
இலக்கு அழைக்கிறது கைதட்டி
என்னும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய்
கைகட்டி ...!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)