10 June 2011

மாறாத சொற்கள் ...!








பணியின் நிமித்தமாக 
வெளியூரில் வேலை செய்து விட்டு 
விடுமுறையில் 
வீடு திரும்பும்போதெல்லாம் 
ஏதாவது ஒன்று மாறியிருக்கிறது ....!

வீடு புதிதாய் 
வெள்ளையடிக்கப்பட்டிருக்கிறது...
எப்போதும் கலைந்து கிடக்கும் 
என் புத்தக அலமாரி 
அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருக்கிறது..! 
மீன் தொட்டியில் 
இரண்டு மீன்கள் புதிதாய் வந்திருந்தன...!
டி வி யும், பீரோவும்
இடம் மாறி இருந்தன ...!
முகம் பார்க்கும் கண்ணாடி 
பெரிதாகி இருந்தது ...!
ஆனாலும் ....
ஒவ்வொருமுறை 
வீட்டுக்குள் நுழையும் போதும்...

"என்னடா 
உடம்பு இப்படி இளைச்சி போயிருச்சி
ஒழுங்கா சாப்படறியா இல்லையா ?"
என்கிற அம்மாவின் வார்த்தைகள் மட்டும் 
இன்னும் மாறவே இல்லை ....!  

06 February 2011

எழுத்து முத்தங்கள்....!





என் அலைபேசியின்
குறுந்தகவல்களில்
குவிந்து கிடக்கும்
சொற்களுக்குள் இன்னும்
ஈரமாகவே இருக்கிறது ....
நீ கொடுத்த எழுத்து முத்தங்கள்....!

25 January 2011




எல்லோரும் கத்தியை
உறைக்குள் தான் வைத்திருப்பார்கள்...!
நீ மட்டும் தான்
கண்களில் வைத்திருக்கிறாய்...! 

31 December 2010

இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ....!



நொடி நொடியாய்
கடந்துபோன நிமிடங்களில்
கடைசி நொடிகள் கரைந்து கொண்டிருக்கும்
இந்த நிமிடங்களில் ....

கனவுகளோ ....
கண்ணீரோ ....
கவிதைகளோ ....
காயங்களோ ....
காதலோ ....
நட்போ ....

ஏதோ ஒன்றையோ அல்லது
ஒட்டுமொத்தமாய்
எல்லாவற்றையுமோ
கொடுத்துவிட்டு .....

கைகாட்டி விடைபெறும்
இந்த வருடத்தை வாழ்த்துக்களோடு
அனுப்பிவைத்து....

நமக்கான எல்லாவற்றையும்
எடுத்து வந்த புதிய வருடத்தை
புன்னகையோடு வரவேற்போம்...!

இனிய ஆங்கில புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் ....!




 




20 December 2010

வலி...!




முதுகுக்குதான் தெரியும்
சுமக்கின்ற வலி ....
முயற்சிக்குதான் தெரியும்
தோல்வியின் வலி...!